Monday, November 2, 2009

தொடர்வண்டி வழி மறிக்கிறது

1.
தொடர்வண்டி வழி மறிக்கிறது

அந்த வினாடிகளில்தான்
நம் வாழ்வில்
மீண்டுமொருமுறை
பெரும்துக்கம்
பீடித்துக்கொள்கிறது.
நம்மை துரோகித்துப்போன
காதல்
தும்மலைப்போல
வந்துறுத்துகிறது.
வஞ்சித்த நட்பொன்று
ஞாபகத்தில்
ரத்தத்தை சூடேற்றுகிறது.
நம் குழந்தைக் காலத்தை
மீட்டெடுத்து தட்டிப்
பறிக்கிறார்கள்.
பொறுமையின்
பெருங்கணங்கள்
கரைந்துருகி
தார்ச்சாலைகளில் பிசுபிசுக்க
மெல்ல நகர்கிறது
வாகனங்கள்.
தடதடத்துக் கடந்து போகிறது
எதிரே வழி மறித்த
தொடர்வண்டி.
கலையும் கூட்டத்திலிருந்து
கலைகிறோம் நாமும்!

2.
தேவதைகள்

நாம் எதிர்பார்ப்பதுபோல்
தேவதைகள் நடந்து
கொள்வதில்லையெனினும்
தேவதைகளில்லையென்று
ஒப்புக் கொள்ளவும்
சங்கடமாயிருக்கிறது.

தினமொரு கடிதம்
நிமிடத்திற்கொரு எஸ்.எம்.எஸ்.
சற்று நேரத்திற்கொருமுறை
தொலைபேசியில் சிணுங்கலென்று
நம் கோரிக்கைகளை
தேவதைகள் பரிசீலிக்காவிடினும்
அவர்கள் தேவதைகளே!

பாவாடை தாவணி
ரெட்டை ஜடை
ஒற்றை ரோஜா
தேவதைகல் குறித்த கணிப்பு
தவறிப் போனாலும்
சுடிதார், பாப்கட்டிங், அவசரநடை
ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம்
தேவதைகளென.

அவரவர் வீட்டில்
அம்மாக்களாகவும் அக்காக்களாகவும்
தங்கைகளாகவும்
தேவதைகள் இருப்பதை
ஏற்றுக்கொள்வதில்லையெனினும்
அவர்கள்
அச்சொல்லொன்றிற்காக
எதிர்பார்த்திருக்கிறார்கள் என்றைக்கும்!

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பர்ப்..குறிப்பா தேவதைகள் கவிதையின் வரிகள்...

தேவன் மாயம் said...

அவரவர் வீட்டில்
அம்மாக்களாகவும் அக்காக்களாகவும்
தங்கைகளாகவும்
தேவதைகள் இருப்பதை
ஏற்றுக்கொள்வதில்லை///

சே!!! உண்மை நூறு சதம்!!

Pinnai Ilavazhuthi said...

//அவரவர் வீட்டில்
அம்மாக்களாகவும் அக்காக்களாகவும்
தங்கைகளாகவும்
தேவதைகள் இருப்பதை
ஏற்றுக்கொள்வதில்லை//

உண்மையை மறைப்பதற்கில்லை!.. மனிதனின் மனம் எப்போதுமே அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்த்து உண்மையான தேவதையாக இருந்தால் கூட எளிதில் பாராட்டுவதில்லை. எளிய நடையில் நல்லதொரு ஆழமான சிந்திக்க வேண்டிய எழுத்துக்கள்/கவிதை. நல்ல படைப்புகளை எதிர்நோக்கி

Rajabaskar said...

Very Cute ..

Regards
Rajabaskar thangaraj

Post a Comment