நீ
புன்னகைக்காமலும்
கோபப்படாமலுமிருந்த
புகைப்படத்தின் முன் நிற்கிறேன்
கிளைத்து அரும்புகிறது
ஒரு யுகத்துக்கான விசும்பல்
அலைகள் துறந்த கடற்கரையோரம்
பொறுக்கிய கிளிஞ்சல்களில்
படிந்திருக்கிறது
நிராசையின் கரும்புள்ளிகள்
மலைப் பயணத்தில்
பறிக்கத் தவறிய
பெயர் அறியாத பூக்களின் புன்னகை
படர்கிறது இரவின் கடைசித் துளியிலும்
யாருடைய தேற்றலுமற்று
ஓயும் குழந்தையொன்றின்
அழுகையாய்ப் பெருக்கெடுக்கிறது
நீயற்ற பொழுதுகளின்
வெற்றிட வெம்மை!
3 comments:
மலைப் பயணத்தில்
பறிக்கத் தவறிய
பெயர் அறியாத பூக்களின் புன்னகை
படர்கிறது இரவின் கடைசித் துளியிலும்
யாருடைய தேற்றலுமற்று
ஓயும் குழந்தையொன்றின்
அழுகையாய்ப் பெருக்கெடுக்கிறது
நீயற்ற பொழுதுகளின்
வெற்றிட வெம்மை!
தலைப்பை வலியுறுத்தும்
அழகான வரிகள்
உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் சார்.
அருமையான கவிதை... பணி தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment