Tuesday, January 12, 2010

ராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை

தன் நெடுநாளைய
எதிர்பார்ப்பு அரண்மனைக்குள்
அடியெடுத்துவைத்தாள்
தனக்கான சேவகர்கள் மண்டியிட்டிருக்க
எல்லோருக்கும் வாரி வாரி வழங்கினாள்
பேரன்பையும் கருவூலபெட்டகத்தையும்
நாட்டின் மூலைமுடுக்கெல்லாம்
சோற்றால் செழித்திருக்கும்படியாய்
ஆணைகளை பிறப்பித்தாள்.
எட்டுத்திக்கும் கொழிக்கும் வளம்பார்த்து
சிலாகித்து பெருமூச்சு விடுகையில்
நாடகம் முடிந்தும்
இன்னும் ராணியின் கனவாவென
கிரீடத்தை கழற்றச்சொல்லி
அதட்டிய ஆசிரியையின் கையில்
ஒப்படைத்தாள் சிறுமி
தன் பெரும் கனவுகள் யாவற்றையும்.

-"புன்னகை" அம்சப்ரியா

(உரையாடல் போட்டிக் கவிதை)

8 comments:

நிலாரசிகன் said...

அற்புதமான கவிதை!

சிறுமியின் உலகிற்குள் சென்றுதிரும்பிய அனுபவம் அலாதியானது.

சிற்றிதழில் தீவிரமாக இயங்கிவரும் உங்களை போன்ற படைப்பாளிகளையும் உரையாடல் போட்டி கவர்ந்திருப்பது வலையுலகம் கவனிக்கப்படுகிறது என்பதற்கு மற்றுமொரு முக்கிய சாட்சி.வெற்றி பெற வாழ்த்துகள் சார்.

அவனி அரவிந்தன் said...

ஒரு சிறிய நிகழ்வின் வழியாக பெரும் கனவுகள் தாரை வார்க்கப் படுவதின் வலி இக்கவிதையில் எளிமையாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !

தமிழ் said...

சிறுமியின் வாயிலாக‌
அருமையான சிந்தனை

வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

 
ஹாஹா.. ரொம்ப நல்லா இருக்குங்க

அம்சப்ரியா said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே.

அன்புடன் அருணா said...

ஆஹா...பூங்கொத்து!

Senthilkumar said...

அருமையான கவிதை!
வெற்றி பெற வாழ்த்துகள்

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

Post a Comment